திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை நடக்கிறது

நாளை இரவு நந்தி வாகன சேவை நடக்கிறது.ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை நடக்கிறது
Published on

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை) மகாசிவராத்திரி விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சிறப்பு வரிசைகள், சாமியானா பந்தல்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியையொட்டி நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணி வரை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை தேரோட்டம், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நந்தி வாகன சேவை நடக்கிறது.

மேலும் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவ அபிஷேகம், புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாணம், இரவு திருச்சி உற்சவம் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com