திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com