வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு: திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் திரிசூல ஸ்நானம்

ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது.மூலவர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
கபிலத்தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி (உள்படம்:திரிசூல ஸ்நானம் நடந்தபோது எடுத்தபடம்).
கபிலத்தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி (உள்படம்:திரிசூல ஸ்நானம் நடந்தபோது எடுத்தபடம்).
Published on

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை வாகன வீதிஉலா நடந்தது.

அதில் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்திலும், சிவகாமசுந்தரி பல்லக்கிலும் எழுந்தருளினர். ஊர்வலம் ேகாவிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக அண்ணாராவ் சர்க்கிள் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. வழியில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி கொடுத்தனர்.

முன்னதாக காலை 8.30 மணியளவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் மற்றும் திரிசூலம் ஆகியவற்றுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், அதன்பிறகு கபிலத்தீர்த்தத்தில் திரிசூல ஸ்நானமும் நடந்தது. அதேபோல் மூலவர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் கபிலேஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. நிறைவாக இரவு 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை ராவணாசூர வாகன வீதிஉலா நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com