பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி திருச்சி வாகனத்தில் வீதி உலா

உற்சவர்களுக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.
பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி திருச்சி வாகனத்தில் வீதி உலா
Published on

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை திருச்சி வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

அதன்பின் அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறுகள் மற்றும் நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்கரித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com