2026 ஐப்பசி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
 rasipalan
Published on: 

தனுக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பரி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் இருக்கிறார். மாதத் தொடக்கத்தில் 9-ம் இடத்திற்கு வருகிறார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதால் நல்ல பலன்கள் பலவும் இம்மாதம் நடைபெறும். மேலும் உங்கள் ராசிநாதனாகவே குரு இருப்பதால் அதன் பார்வை பலத்தால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் ராகு-கேதுக்களின் மாற்றமும் இம்மாதம் நிகழவிருக்கிறது.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-6 தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. ஜென்ம ராசியைப் பார்க்கும் குருவால் நன்மைகள் அதிகரிக்கும். நம்பிக்கை அனைத்தும் நடைபெறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆசியும், அனுபவஸ் தர்களின் அறிவுரையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

குருவின் பார்வை 3. 5 ஆகிய இடங்களில் பதிவதால் உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். பலமுறை முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது தரிதமாக நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நிைனத்தாலும் செய்ய இயலும், பூர்வீக இடங்களைப் பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் ஓயும். பிறர் வியக்கும் அளவிற்கு வீடு கட்டுவதோ, வாங்குவதோ நடைபெறும் நேரம் இது.

ராகு- கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அங்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் வாசம் செய்து தனவரலை அதிகரிக்கச் செய்வார். வியாபாரப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சவாலாகத் தெரிந்த வேலைகளைக் கூட சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. உறவினர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். நினைத்ததை நினைத்தபடி முடிப்பீர்கள். தெளிவான சிந்தனையோடு செயல்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைத்து தொழில் கூட்டாளிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.

அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அரசு வழி சிக்கல்களுக்கு ஆனாக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். சர்ப்பக் கிரகங்கள் 8-ல் வரும் பொழுது சங்கடங்கள் அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் தேவை. அதோடு தெய்வ நம்பிக்கையும் அவசியம் தேவை. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வேலைப்பளு கூடும். அனைவரிடமும் அனுசரித்துச்செல்வது நல்லது.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டியாளர் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் புகுந்த வீட்டிற்கும். பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள்,

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் கேது சஞ்சரிக்கிறார். மேலும் மாதத் தொடக்கத்திலேயே குருவும் மத்திற்கு வருகிறார். எனவே மிகமிக கவனமாக செயல்பட வேண்டிய மாதம் இது. அதுமட்டுமல்லாமல் அஷ்டம ஸ்தானம் வலுவடையும்பொழுது அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று நினைப்பீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும் வாக்குவாதங்களால் வளர்ச்சி தடைபடாமல் இருக்க எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற தெய்வீக சிந்தனையும். வழிபாடுகளும் கைகொடுக்கும்.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் மனக்கலக்கம் ஏற்பட்டாலும், அதன் பார்வை பலனால் ஓரளவு நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக குடும்ப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய தகவல் வரலாம். வீடு வாங்கும் முயற்சி கைகூடும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புனிதப் பயணங்கள் அமையும்.

குருவின் பார்வை 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு, செய்தொழிலில் உங்கள் திறமை பளிச்சிடும். கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலுமாக பணிபுரிந்தவர்கள் இனி ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பைப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று ஜென்ம ராசிக்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் பொழுது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். உடன்பிறப்புகள் பகையாவர். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கலக்கம் அதிகரிக்கும். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை.

சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் அடிக்கடி பயணம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. வீடு மாற்றம், இடமாற்றம் உறுதியாகலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தக் கட்டிடத்திற்கு மாறும் முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் முயற்சியும் நடந்தேறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடை அதிகரிக்கலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு சந்திகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது யோசித்துப் போடுவது நல்லது. மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செலவிற்கேற்ற வரவு உண்டு.

கும்ப ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் தள ஸ்தானத்தில் இருக்கிறார். குரு பகலான் மாதத் தொடக்கத்திலேயே சிம்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப்போகிறார். மாதக் கடைசியில் ராகு-ரேலுக்களின் பெயர்ச்சியும் நிகழலிருக்கிறது. இந்த கிரககளின் பெயர்ச்சியால் நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடந்தாலும், குரு பார்வை பதியப்போவதால் முடிவில் நல்லது நடக்கும். எனவே அந்த குரு பகவானை சிறப்பாகக் கொண்டாடி வழிபட வேண்டிய மாதம் இது மேலும் சர்ப்பக்கிரகம் விலகுவதால் அந்த நேரத்தில் சர்ப்ப தெய்வ வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் கூடும்.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-6 நேதி (20.10.2005) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் வருகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு பார்வை பதிந்த இடங்கள் எல்லாம் நன்மை தரும் என்பதால், உங்கள் உடல்நலமும், மனநலமும் சீராகும். மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். பொருளாதாரப் பற்றாக்குறை அலைம், புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிவதால் அண்ணன் தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். ஒற்றுமை பலப்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். குடும் பச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. எதிலும் ஈடுபடும் முன் கொஞ்சம் யோசித்துச் செயல்படுவது நல்லது உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தடுமாற்றம் அகலும். தொழில் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பர், வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடம் எனப்படும் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டு காலம் அவர் தங்கி இருக்கும் பொழுது வீண் விரயம் அதிகரிக்கும் என்பது பொதுவான நியதி. மேலும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகின்றது. எனவே சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. அடிக்கடி பயனணங்கள் ஏற்படும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம். கடன்கமை அதிகரித்தாலும் உடனுக்குடன் அதை நிவர்த்தி செய்வீர்கள். இருப்பினும் தொழில் முன்னேற்றம் கருதி வங்கிகளில் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஆறாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உத்தியோகம், தொழிவில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. உடல்நலனில் பிரச்சினை அதிகரிக்கும். மூடிக்கிடந்த தொழில் நிலையத்தை திறப் புவிழா நடத்திப் பார்க்க எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் ஆர்வம் இருந்தாலும் அதிகாரிகளின் கெடுபிடியால் மளவருத்தம் ஏற்படும்.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

மீன ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சிம்ம ராசிக்கு செல்லப்போகிறார். மாதக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. மேலும் எனி வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. காரிய தாமதங்களும், கவலைகளும் அதிகரிக்கும். வந்த பணம் மறுநிமிடமே செலவாகி தளர்ச்சியை உருவாக்கும். நிலம், பூமி பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். என்னயிருந்தாலும் நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி மாதம் 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனித மடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கும். குறிப்பாக 2-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். சச்சரவுகள் ஓயும். பொருளாதார பற்றாக்குறை அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தேங்கிய காரியங்கள் விறுவிறுப்பாக நடைபெறும்.

குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு லாபம் பெருக்க முன்வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். 'கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். பார்க்கும் குருவைப் பலப்படுத்த குரு பகவான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஒரு சிலருக்கு பதவி மாற்றங்கள் வரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் புதிய திருப்பங்களைக் காண்பர். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும் மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று 11-ம் இடத்திற்கு செல்லப்போகிறார். அங்கு அவர் ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் போது பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படும். வாபம் சிறப்பாக இருக்கும். தொழிவில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்துசேரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம் சுயஜாதகம் பலம்பெற்று இருந்தால், அதை உபயோகப்படுத்திர் கொள்வதில் தவறு இல்லை.

சகோதரத்தோடு இருந்த பகை மாறும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆன்மிக சுற்றுலா அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு கைகூடும். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும்.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்குச் சுபகாரியப் பேச்சுக்கள் கைடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com