

வரலட்சுமி விரத நாளில், மகாலட்சுமிக்கு உரிய சக்தி வாய்ந்த பாடல்களையும், மந்திரங்களையும் சொல்லி வழிபட்டால் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம
ஓம் அமரர்தம் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம
ஓம் விஜய லக்ஷ்மியே நமோ நம
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம
ஓம் ஜய லக்ஷ்மியே நமோ நம
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம
ஓம் தன லக்ஷ்மியே நமோ நம
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம