Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.9.2026- சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
Published on: 

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

ரிஷபம்

நிதிநிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்துசேரலாம். வரன்கள் முடிவாகும்.

கடகம்

அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று இனத்தவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.

சிம்மம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கன்னி

முயற்சியில் வெற்றி தரும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

துலாம்

சுபச் செலவு ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.

விருச்சிகம்

புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

தனுசு

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மகரம்

ஆரோக்கியம் சீராகும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

தனவரவு திருப்தி தரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை உண்டு.

மீனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்துமுடிப்பீர்கள். அன்னிய தேச அழைப்புகள் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com