Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.9.2026- வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Rasipalan
ராசிபலன்
Published on

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.

ரிஷபம்

இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

மிதுனம்

வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் தொடர்பாக புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஊக்கத் தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

கடகம்

நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பு உண்டு. பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரலாம்.

கன்னி

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

துலாம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்

போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி லாபம் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

தனுசு

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி வந்துசேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களும் ஒத்துழைப்புத் தருவர்.

மகரம்

புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட உதவி கிடைக்கும்.

கும்பம்

சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். பணப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு வந்து சேரும்.

மீனம்

வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களைப் பிரமிக்க வைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com