Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.11.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வரவு திருப்தி தரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
rasipalan
Published on: 

மேஷம்

நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரலாம்.

ரிஷபம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. உத்தியோகத்தில் பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்கும்.

மிதுனம்

தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

கடகம்

யோகமான நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

சிம்மம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி

பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வழிப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் தனவரவு உண்டு. வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

விருச்சிகம்

வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள்.

தனுசு

வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

மகரம்

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வரவும், செலவும் சமமாகும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனம் தேவை. பயணத்தால் விரயம் உண்டு.

கும்பம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.

மீனம்

சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

X