Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.9.2026: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி அளிக்கும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

புதிய பாதை புலப்படும் நாள். பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

மிதுனம்

அல்லல்கள் அகலும் நாள். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கடகம்

மனக்குழப்பம் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

சிம்மம்

யோகமான நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

வெளியுலகத் தொடர்பு நன்மை தரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

தனுசு

குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத்தொழில் புரிவோர் லாபம் காண்பர், திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

மகரம்

செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.

கும்பம்

அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும் நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்துகொள்ள வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com