

பிரச்சனைகள் தீரும் நாள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். சுபகாரியப்பேச்சு முடிவாகும். வரவு திருப்தி தரும்.
அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்ய முன்வருவீர்கள்.
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களை செய்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகும். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். உத்தியோகத்தில் தேங்கிக்கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பிரபலஸ்தர்கள் மூலம் காரியமொன்று நிறைவேறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம்.
மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைத் தருவர். கூட்டுத்தொழில் தனித்தொழிலாக மாறும்.
பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும் நாள். பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். சந்தித்தவர்களால் சில நன்மைகள் உண்டு.
புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.