Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Rasipalan
ராசிபலன்
Published on: 

மேஷம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

ரிஷபம்

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மிதுனம்

புகழ் கூடும் நாள். நீண்ட நாள் எண்ணம் நிறை வேறும். உடன்பிறப்புகள் வழி யில் உற்சாகமான தகவல் உண்டு. உத்தியோகத்தில் உத்தியே கடுமையாக உழைக்க நேரிடும்.

கடகம்

சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். நிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்புக் கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும்.

சிம்மம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். தடைப்பட்ட காரியம் தடையின்றி நடைபெறும்.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். உடல் நலம் கவலையை உருவாக்கும்.

துலாம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நட்பு பகையாகலாம். உறவினர்கள் உங்கள் செயல்பாட்டிற்கு குறை கூறுவர். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.

விருச்சிகம்

நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படும்.

தனுசு

வரவு திருப்தி தரும் நாள். சவால்களைச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புக் கிட்டும்.

மகரம்

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டு. தொழிலை விரிவு செய்ய முன்வருவீர்கள், துணிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

கும்பம்

குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வருமானம் உயரும்.

மீனம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முடிவு வெற்றி தரும்.

X