Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தடைகள் அகலும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Todays Rasipalan
Published on: 

மேஷம்

புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கூடும்.

ரிஷபம்

மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிர்பார்த்த காரியம் தாமதப்படும். கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் லாபம் தரும். கொள்கைப் பிடிப்பைக் தளர்த்திக் கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

சிம்மம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

கன்னி

பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும்.

துலாம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்

கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

தனுசு

நடக்காத ஒன்றை நினைத்துக் கவலைப்படும் நாள். குடும்பப் பிரச்சினைகளில் பிறர் தலை யிடுவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர் களால் சங்கடங்கள் வரலாம்.

மகரம்

தடைகள் அகலும் நாள். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தேவையான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. வரன்கள் முடிவாகலாம்.

கும்பம்

சுபகாரியப் பேச்சு கைகூடும் நாள். பயணம் பலன் தரும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத் தால் சிறப்படைவீர்கள். உத்தி யோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com