Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.11.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

தனவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

ரிஷபம்

அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

மிதுனம்

புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்மம்

யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.

கன்னி

நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவப் பதவிகள் வரலாம். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலாம்

பிரபலமானவர்களால் பிரச்சனை தீரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும்.

விருச்சிகம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். தொழிலில் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்துவீர்கள்.

தனுசு

மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும்பொழுது குடும்பத்தினர்களைக் கலந்து ஆலோசிப்பதே நல்லது.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பணத்தேவைகள் அதிகரிக்கும். வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.

கும்பம்

தன்னம்பிக்கை குறையும் நாள். தடைகள் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படும். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

மீனம்

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். உடல்நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

X