

திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடிவரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். விரயம் உண்டு. அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள்.