Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 28.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தரும்
Published on: 

மேஷம்

மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மிதுனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.

சிம்மம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.

கன்னி

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

துலாம்

நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று கவலைப்பட நேரிடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறையும்.

விருச்சிகம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்

தனுசு

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பிறரை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம்

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றிச் செய்திகள் விடியற்காலையிலேயே வரலாம். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

கும்பம்

சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

மீனம்

இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com