Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோக முயற்சி வெற்றி தரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
ராசிபலன்
Published on: 

மேஷம்

நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு.

ரிஷபம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோக உயர்வு உண்டு.

மிதுனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் கை மேலோங்கும்.

சிம்மம்

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

கன்னி

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகன வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர்.

துலாம்

விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்பப் பெரியவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.

விருச்சிகம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு

உள்ளத்தில் நினைத்தது உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

மகரம்

அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.

கும்பம்

வாழ்க்கைத் தரம் உயரும் நாள். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்துசேரலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

மீனம்

எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைத் தருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

X