Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் நன்மை ஏற்படும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பும் வரலாம்.

ரிஷபம்

சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

மிதுனம்

அருகிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். முயற்சியில் குறுக்கீடுகள் வரலாம். பணப்பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

கடகம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

சிம்மம்

வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கன்னி

பிள்ளைகளால் நன்மை ஏற்படும் நாள். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

துலாம்

தாய்வழி ஆதரவு கிட்டும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

தனுசு

சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.

கும்பம்

கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

யோகமான நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றைச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com