Today Rasipalan: இன்றைய ராசிபலன் 23.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
Rasipalan
Published on: 
Summary

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

நந்தி வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும் நாள். நேற்றைய பிரச்சனை முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷபம்

குறைகள் அகலும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

மிதுனம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

சிம்மம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.

கன்னி

பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

துலாம்

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

விருச்சிகம்

பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் உண்டு. விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும்.

தனுசு

எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத் திய குற்றச்சாட்டுகள் அகலும்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். கடன் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள்.

கும்பம்

வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

மீனம்

உறவு பகையாகும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் தாமதப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com