Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்

குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்
Published on: 
Summary

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும் நாள். மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

ரிஷபம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். தொழில் ரீதியான பயணமொன்று ஏற்படும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை முடியாமல் போகலாம்.

சிம்மம்

முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

கன்னி

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

துலாம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

தனுசு

குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.

மகரம்

பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

கும்பம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com