

பொழுது விடியும்பொழுதே நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் வரலாம். புதியவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கவேண்டாம்.
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வரவு இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களால் முன்னேற்றம் கூடும்.
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி உண்டு. தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் உதவுவர்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் பிரச்சனை அகலும்.
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும்.
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய மனக்கசப்பு இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
அக்கறை செலுத்தாத காரியத்தில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். வருமானம் திருப்தி தரும்.