Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

ரிஷபம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயம் உண்டு. கூட இருப்பவர்களின் அனுசரிப்புக் குறையும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நட்பு பகையாகும்.

சிம்மம்

குறைகள் தீரும் நாள். திருமணத் தடை அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம்.

கன்னி

போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

துலாம்

சுபச்செய்தி வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும். வாகன யோகம் உண்டு.

விருச்சிகம்

யோகமான நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் பணி உயர்வு வரும்.

தனுசு

வளர்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

மகரம்

மனக்குழப்பம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செல்வநிலை உயரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். உறவினர் பகை அகலும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர்.

மீனம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும்.

X