Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு செல்வநிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக உயர்வு உண்டு.

ரிஷபம்

கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மிதுனம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வரவைவிடச் செலவு கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

கடகம்

மனக்கலக்கம் ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செல்வநிலை உயரும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சிக்கு அலைபேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும்.

கன்னி

ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டு.

துலாம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

விருச்சிகம்

புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

தனுசு

கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

மகரம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

கும்பம்

அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்

வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

X