Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோக முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள்.

ரிஷபம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.

மிதுனம்

முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடகம்

தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும்.

சிம்மம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

கன்னி

தடைகள் விலகும் நாள். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சில நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை.

துலாம்

நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.

தனுசு

புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். அன்னிய தேசத் தொடர்பு உண்டு.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்காகப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

கும்பம்

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

மீனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com