Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணத்தில் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

ரிஷபம்

செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

மிதுனம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். தொழிலில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். யாரையும் நம்பி எதுவும் செய்ய இயலாது.

கடகம்

யோகமான நாள். வெளி வட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். அரசியல்வாதி களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

சிம்மம்

சுபச் செய்தி வந்து சேரும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.

கன்னி

சோர்வுகள் அகலும் நாள். நண்பர்கள் நல்ல தவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஆமோதிப்பர்.

துலாம்

யோகமான நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்

மன உறுதியோடு செயல்படும் நாள். மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

கும்பம்

நல்லது நடக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல்போல தொடர்ந்த கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கல்யாண முயற்சி கைகூடும். பயணம் பலன்தரும்.

X