Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.11.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 13 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வெற்றி நடைபோடும்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும் நாள். வரவைவிடச் செலவு கூடும். யோசித்துச் செயல்படுவது நல்லது. பிறர் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.

மிதுனம்

மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது.

கன்னி

வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

துலாம்

கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும் நாள். இடப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் லாபம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

விருச்சிகம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். முக்கியப் புள்ளிகளைச் சந்திக்க நேரிடும்.

தனுசு

வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். நீங்கள் வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

மகரம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றைச் செயல்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

கும்பம்

கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். மறைமுக எதிர்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

X