Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.10.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.

ரிஷபம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வியாபாரப் போட்டிகள் அகலும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

மிதுனம்

மகிழ்ச்சி கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

சிம்மம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

கன்னி

வருமானம் உயரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். போட்ட திட்டங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

துலாம்

சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழி தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

தனுசு

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மகரம்

புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மீனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள் எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com