Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.11.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on: 

மேஷம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கையை விரிப்பர்.

ரிஷபம்

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடும். வீடு கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

மிதுனம்

அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கடகம்

தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம்

யோகமான நாள். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உயரும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

கன்னி

வரவைவிடச் செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும்.

துலாம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

விருச்சிகம்

வருமானம் உயரும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

மகரம்

அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இட மாற்றங்கள், வந்து சேரலாம்.

கும்பம்

மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். எதிர்ப்புகள் திடீரென சாதகமாகிவிடும். வியாபார முன்னேற்றம் உண்டு.

மீனம்

எதிரிகள் உதிரியாகும் நாள். பணவரவு திருப்தி தரும். தடைப்பட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

X