Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 5 அக்டோபர் 2026: சிவன்கோவில்களில் சோமவார அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Sivan
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு புரட்டாசி 18 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.22 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.05 வரை பிறகு ஆயில்யம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

விநாயகர் கோவில்களில் அபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் சோமவார அபிஷேகம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - தாமதம்

ரிஷபம் - கடமை

மிதுனம் - கவனம்

கடகம் - நற்செயல்

சிம்மம் - உயர்வு

கன்னி - சுபம்

துலாம் - போட்டி

விருச்சிகம் - பக்தி

தனுசு - திடம்

மகரம் - செலவு

கும்பம் - பாராட்டு

மீனம் - பண்பு

X

Maalai Malar
www.maalaimalar.com