

பராபவ ஆண்டு, கார்த்திகை - 12 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி நண்பகல் 12.18 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 6.44 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் பவனி நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலல் சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம் திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை, ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
மேஷம் - தெளிவு
ரிஷபம் - உதவி
மிதுனம் - வரவு
கடகம் - நன்மை
சிம்மம் - தாமதம்
கன்னி - உயர்வு
துலாம் - இன்பம்
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - பெருமை
மகரம் - புகழ்
கும்பம் - பரிசு
மீனம் - முயற்சி