

பராபவ ஆண்டு, ஐப்பசி - 8 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி காலை 11.30 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.56 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பவுர்ணமி. சுப முகூர்த்த தினம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவாரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
மேஷம் - உண்மை
ரிஷபம் - வாழ்வு
மிதுனம் - களிப்பு
கடகம் - அன்பு
சிம்மம் - போட்டி
கன்னி - ஜெயம்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - தீரம்
தனுசு - பெருமை
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - மாற்றம்
மீனம் - கடமை