Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 செப்டம்பர் 2026: பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Siva peruman
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-7 (வியாழக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி இரவு 11.05 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : அவிட்டம் காலை 11.04 மணி வரை பிறகு சதயம்

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை

பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம், புஷ்பச் சப்பரத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதியுலா. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் புஷ்ப யாகம் சாற்று முறை.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - அன்பு

மிதுனம் - நிறைவு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - நட்பு

கன்னி - ஈகை

துலாம் - உறுதி

விருச்சிகம் - தனம்

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - கடமை

கும்பம் - கண்ணியம்

மீனம் - கட்டுப்பாடு

X

Maalai Malar
www.maalaimalar.com