Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 செப்டம்பர் 2026: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Perumal sridevi bhudevi
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-6 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி இரவு 10.26 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : திருவோணம் காலை 9.35 மணி வரை பிறகு அவிட்டம்

யோகம் : சித்த / மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. தல்லாக்குளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ரதோற்சவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ ராமபிரானுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு, திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - அமைதி

ரிஷபம் - ஈகை

மிதுனம் - ஊக்கம்

கடகம் - தாமதம்

சிம்மம் - மாற்றம்

கன்னி - நன்மை

துலாம் - நலம்

விருச்சிகம் - ஆதாயம்

தனுசு - சுகம்

மகரம் - லாபம்

கும்பம் - ஆர்வம்

மீனம் - நற்செயல்

X

Maalai Malar
www.maalaimalar.com