

பராபவ ஆண்டு, புரட்டாசி-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 9.18 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : உத்திராடம் காலை 7.38 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ ஏகாதசி. திருவோண விரதம், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதியுலா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
மேஷம் - புகழ்
ரிஷபம் - அன்பு
மிதுனம் - உவகை
கடகம் - நலம்
சிம்மம் - அமைதி
கன்னி - பெருமை
துலாம் - பொறுப்பு
விருச்சிகம் - ஜெயம்
தனுசு - அனுகூலம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - முயற்சி
மீனம் - சுபம்