

பராபவ ஆண்டு, புரட்டாசி-2 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : மூலம் பின்னிரவு 2.55 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
மேஷம் - நலம்
ரிஷபம் - பொறுமை
மிதுனம் - இன்பம்
கடகம் - பண்பு
சிம்மம் - உவகை
கன்னி - ஈகை
துலாம் - நிறைவு
விருச்சிகம் - மேன்மை
தனுசு - சுகம்
மகரம் - ஜெயம்
கும்பம் - வெற்றி
மீனம் - ஆதரவு