Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 செப்டம்பர் 2026: கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Perumal
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-1 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி நண்பகல் 1.54 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.15 மணி வரை பிறகு மூலம்

யோகம் : மரண / அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா

தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம் இரவு சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சுவாமி சர்வ பூபால வாகனத்திலும் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. நாட்டரசன்கோட்டை குணசீலம் கோவில்களில் ஸ்ரீ நம்பெருமான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமணருக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - இன்பம்

ரிஷபம் - பணிவு

மிதுனம் - பரிவு

கடகம் - பாசம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - ஆக்கம்

துலாம் - அன்பு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - போட்டி

மகரம் - முயற்சி

கும்பம் - ஈகை

மீனம் - பயிற்சி

X

Maalai Malar
www.maalaimalar.com