Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 நவம்பர் 2026: ஜெனகை மாரியம்மன் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
jenagai mariamman
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, கார்த்திகை - 2 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி பின்னிரவு 3.14 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : சதயம் பின்னிரவு 3.13 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலகாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - பாராட்டு

ரிஷபம் - ஆசை

மிதுனம் - நன்மை

கடகம் - உதவி

சிம்மம் - நலம்

கன்னி - அன்பு

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - திடம்

மகரம் - நிம்மதி

கும்பம் - சுகம்

மீனம் - தாமதம்

X