

பராபவ ஆண்டு, புரட்டாசி-30 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி (முழுவதும்)
நட்சத்திரம் : மூலம் காலை 9.53 வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சன சேவை.
மேஷம் - நன்மை
ரிஷபம் - திறமை
மிதுனம் - தேர்ச்சி
கடகம் - கவனம்
சிம்மம் - சாந்தம்
கன்னி - ஜெயம்
துலாம் - அமைதி
விருச்சிகம் - சுகம்
தனுசு - நலம்
மகரம் - புகழ்
கும்பம் - பணிவு
மீனம் - பொறுமை