

பராபவ ஆண்டு, புரட்டாசி-28 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி பின்னிரவு 3.10 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : கேட்டை (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக்கலசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவெம்பல், பாபநாசம், திருக்குற்றாலம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. பட்டீஸ்வரம், சுதிராமங்கலம் கோவில்களில் துர்கா ஸ்நானம் (புனித நீராட்டல்) - குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணன் கோலத்துடன் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமான், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியபெருமாள் புறப்பாடு.
மேஷம் - மேன்மை
ரிஷபம் - கடமை
மிதுனம் - ஜெயம்
கடகம் - உண்மை
சிம்மம் - கண்ணியம்
கன்னி - உயர்வு
துலாம் - தனம்
விருச்சிகம் - வரவு
தனுசு - சுபம்
மகரம் - கவனம்
கும்பம் - லாபம்
மீனம் - பயணம்