Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 நவம்பர் 2026: கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
சூரசம்ஹாரம்
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 29 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி இரவு 11.45 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம் : உத்திராடம் இரவு 10.07 மணி வரை பிறகு திருவோணம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரசம்ஹார விழா

சஷ்டி விரதம். கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா, சகல சுப்பிரமணிய கோவில்களிலும் சூரசம்ஹார விழா. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர் உற்சவாரம்பம். திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாண்டவர் மாலை சூரசம்ஹார விழா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நன்மை

ரிஷபம் - அன்பு

மிதுனம் - தனம்

கடகம் - வெற்றி

சிம்மம் - பரிவு

கன்னி - பயணம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - சுபம்

தனுசு - போட்டி

மகரம் - நலம்

கும்பம் - உற்சாகம்

மீனம் - பயணம்

X