Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 நவம்பர் 2026: சக்திவேல் வாங்குதல் வைபவம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Murugar
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஐப்பசி - 28 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி இரவு 9.49 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : பூராடம் இரவு 7.40 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவர் ரதோற்சவம் இரவு ஸ்ரீ உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கல்யாணம் இரவு வெள்ளி ரதத்தில் பவனி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ கோவிகளில் சிநேகவல்லியம்மன் காலை அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - தனம்

ரிஷபம் - போட்டி

மிதுனம் - ஆர்வம்

கடகம் - விவேகம்

சிம்மம் - ஆக்கம்

கன்னி - பாராட்டு

துலாம் - அன்பு

விருச்சிகம் - செலவு

தனுசு - நற்செயல்

மகரம் - வரவு

கும்பம் - பணிவு

மீனம் - சுபம்

X