Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 12 அக்டோபர் 2026: மதுரை மீனாட்சியம்மன் கோலாட்ட அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோலாட்ட அலங்காரம்
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-25 (திங்கள்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை இரவு 10.28 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : சுவாதி இரவு 12.50 மணி வரை பிறகு விசாகம்

யோகம் : அமிர்த / மரணயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை

சந்திர தரிசனம். குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்திலும், விக்னேஸ்வரர் கோலத்துடனும் காட்சி, மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோலாட்ட அலங்காரம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வீதியுலா, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - நிறைவு

மிதுனம் - முயற்சி

கடகம் - பெருமை

சிம்மம் - அனுகூலம்

கன்னி - நலம்

துலாம் - நட்பு

விருச்சிகம் - புகழ்

தனுசு - போட்டி

மகரம் - சாதனை

கும்பம் - இன்பம்

மீனம் - பண்பு

X

Maalai Malar
www.maalaimalar.com