

பராபவ ஆண்டு, ஐப்பசி - 26 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை மாலை 5.39 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : கேட்டை பிற்பகல் 2.35 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவர் காலை மோகனாவதாரம், இரவு தங்கமயில் வாகனத்தில் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ரதோற்சவம். குமாரவயலூர் ஸ்ரீ முருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி. திருவட்டாறு ஸ்ரீ சிவபெருமான் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் திருமஞ்சன சேவை.
மேஷம் - உயர்வு
ரிஷபம் - நட்பு
மிதுனம் - வெற்றி
கடகம் - பண்பு
சிம்மம் - உண்மை
கன்னி - பணிவு
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - தெளிவு
மகரம் - உறுதி
கும்பம் - பொறுமை
மீனம் - ஓய்வு