Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 செப்டம்பர் 2026: சர்வ அமாவாசை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Amavasai tharpanam
Published on

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆவணி-24 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி காலை 10.56 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : மகம் பிற்பகல் 3.14 மணி வரை பிறகு பூரம்

யோகம் : அமிர்த / சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்

சர்வ அமாவாசை. இளையான்குடி மாற நாயனார் குருபூஜை. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளிக் கேடயத்திலும், மாலை கஜமுக சூரசம்ஹர லீலை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி திலதர்ப்பணபுரி கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்திய மூர்த்தி புறப்பாடு, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - கண்ணியம்

ரிஷபம் - உதவி

மிதுனம் - ஒற்றுமை

கடகம் - உறுதி

சிம்மம் - நிம்மதி

கன்னி - லாபம்

துலாம் - தெளிவு

விருச்சிகம் - திடம்

தனுசு - மேன்மை

மகரம் - நற்செயல்

கும்பம் - ஆக்கம்

மீனம் - அன்பு

X

Maalai Malar
www.maalaimalar.com