Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 10 அக்டோபர் 2026: மகாளய அமாவாசை

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
tharpanam
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, புரட்டாசி-23 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை இரவு 9.34 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : அஸ்தம் இரவு 10.42 மணி வரை பிறகு சித்திரை

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம். ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதைப்பதி திலதர்ப்பணபுரி தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. நயினார்கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் காலை திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - ஓய்வு

கடகம் - புகழ்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - ஊக்கம்

துலாம் - தனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - வெற்றி

மகரம் - போட்டி

கும்பம் - தெளிவு

மீனம் - லாபம்

X

Maalai Malar
www.maalaimalar.com