

ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் 10 நாட்கள் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் தொலை தூரங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்தை சந்தித்தனர்.
ஆகஸ்டு மாதம் மட்டும் 24.56 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ.137.44 கோடி வசூலானது. இந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம், ஸ்ரீதேவி பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது இன்று ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர். நாளை மறுநாள் தரிசனத்திற்கான நேர ஒதுக்கீட்டு இலவச தரிசனம் டிக்கெட் நாளை முதல் வழக்கம் போல் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 78, 310 பேர் தரிசனம் செய்தனர். 34,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
4.14 லட்சம் லாட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.