திருப்போரூர் முருகன் கோவில் 50-வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை விழா

மாதம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பள்ளியறை பூஜை நிகழ்ச்சி பூக்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமான் வலம் வருவது மிக விசேஷமாக நடைபெறும்.
திருப்போரூர் முருகன் கோவில் 50-வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை விழா
திருப்போரூர் முருகன் கோவில் 50-வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை விழா
Published on
Summary

திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் 50-வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை அர்த்த ஜாமத்தில் பள்ளியறை வழிபாட்டுக் குழுவின் சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. மூலவருக்கு புனுகுச் சட்டம், வஸ்திரம் சாற்றி, 150 முழம் பூக்களால் பள்ளியறை, பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. கைலாய வாத்தியங்கள் முழங்க முருகன் வள்ளி தெய்வானையுடன் பல்லக்கில் வலம் வந்து, ஊஞ்சல் பூஜை, தீபாரதனை, அன்னதானம் நடைபெற்றது.

திருப்போரூர், செப். 23-திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் விடுமுறை, விசேஷ தினங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.

விசேஷம்

தினமும் அர்த்த ஜாமம் மற்றும் பள்ளியறை வழிபாட்டுக் குழு சார்பில் பள்ளியறை பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் மாதம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பள்ளியறை பூஜை நிகழ்ச்சி பூக்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமான் வலம் வருவது மிக விசேஷமாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்தநிலையில் நேற்று 50-வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை நிகழ்ச்சி அர்த்த ஜாமம் மற்றும் பள்ளியறை வழிபாட்டுக் குழுவின் சார்பில் திருப்போரூர் முருகன் கோவில் வளாகத்தில் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு புனுகுச் சட்டம் சாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல் மற்றும் முருகப்பெருமானின் பள்ளியறை மற்றும் பல்லக்கு முழுவதும் சுமார் 150 முழம் பூ கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் கைலாய வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் பல்லக்கில் கோவில் வெளிப்புற வளாகத்தில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பாடல்களை பாடியபடி உடன் வந்தனர். பின்னர் பள்ளியறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு நிறைய பழ வகைகள் படைக்கப்பட்டன. பூஜைகள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com