ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி
ஸ்ரீகாளஹஸ்தி
Published on

ஸ்ரீ காளஹஸ்தி :

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையிலும், பக்தர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் இன்று (புதன்கிழமை) முதல் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவிலில் நடக்கும் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com