'கோவிந்தா... கோவிந்தா...' கோஷத்துடன் முழங்கிய புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
Published on
Summary

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று பிறந்து. இன்று புரட்டாசி மாதம் 2-ம் நாள் மற்றும் முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு அபிஷே, ஆராதனைகள் நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் கோவில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சை வண்ணப் பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா துண்ட பெருமாள், ஆதிகேச பெருமாள், திரிநீரகத்தான் பெருமாள், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள வீரராகவப் பெருமாள், திருமுக்கூடலில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், பழைய சிவரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள், உத்திரமேரிலுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் முதல் புரட்டாசி சனிக்கிழமைஓட்டி பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷே, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று சந்தன காப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோவிந்தா என்று கோஷமிட்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com