வில்லாயி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

வில்லாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வில்லாயி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
வில்லாயி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
Published on

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், பைரவர், மலையாளத்தம்மன், அங்காளம்மன் ஆகிய சன்னதிகள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடநதது.

கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்றுகாலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் வில்லாயிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com